திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி, காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி மற்றும் மஞ்சனூத்து கிராமத்தில் 13 ஆதிவாசி பளியர் குடும்பங்கள் உள்ளன. இதில் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு சார்பாக 7 குடும்பத்தினருக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா பெற்று தரப்பட்டது.
இந்நிலையில் வீடில்லாத 9 குடும்பங்களுக்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. திருமதி.விஜயகுமாரி., திண்டுக்கல் எஸ்.பி. திருமதி.ரவளி ப்ரியா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி பழனி டி.எஸ்.பி திரு.சிவா வழிகாட்டுதலின்படி ஆதிவாசி பளியர் மலைவாழ் மக்கள் 09 குடும்பத்தாருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் முயற்சியில் நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜெயசிங் தலைமையில் குழுவினர் ஈடுபட்டனர்.
இதனையடுத்து 9 வீடுகளையும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. திருமதி.விஜயகுமாரி மற்றும் திண்டுக்கல் எஸ்.பி. திருமதி.ரவளி ப்ரியா திறந்து வைத்து ஆதிவாசி பளியர் குடும்பங்களிடம்