மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன். இ.கா.ப அவர்கள் வழிகாட்டுதலின் படி, உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய சரகம், குறிஞ்சி நகரில் வசிக்கும் மலைவாழ் மக்கள் 70 குடும்பங்களுக்கு, மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், திரு. கணேசன் அவர்கள் ஹோமியோபதி நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கி கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு விழிப்புணர்வு செய்தார். உசிலம்பட்டி தாலுகா காவல் ஆய்வாளர், திரு.சார்லஸ் மற்றும் சார்பு ஆய்வாளர், திரு.ராமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்