திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், IPS.,அவர்கள் காவல்துறையினர்க்கு ஊரடங்கு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பாராஜு அவர்கள் மற்றும் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் திரு. சண்முகம் அவர்கள் வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகஸ்தியர் காணி குடியிருப்பு மற்றும் சின்னமயிலாறு பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்கள்.
மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மலைவாழ் மக்களிடம், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடக்கும் படியும், தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தங்கள் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்துமாறு மலைவாழ் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.