சேலம் : சேலம் மாவட்டத்தில் காவல்துறையினர் குற்ற செயல்களில் மற்றும் சாராய வேட்டையில் தீவிர நடவடிக்கை எடுத்து அழித்து வருகின்றனர். இதை அடுத்து சேலம் மாவட்டம் வாழப்பாடி உட்கோட்டம் கரிய கோயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2000 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் லாரி ட்யூப் களில் இருந்த 200 லிட்டர் சாராயம் ஆகியன கல்லூர் மலை வன காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.கென்னடி, ரவீந்திரன், மற்றும் சக்கரவர்த்தி, சக்திவேல், ஆகியோரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்