சேலம் : சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். சிவக்குமார் அவர்கள், கீழ்நிலை காவல் அதிகாரிகளுக்கு மாதாந்திர குற்றவியல் மீளாய்வுக் கூட்டத்தில் வழங்கிய அறிவுரைப்படியும், ஆத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நாகராஜன், அவர்கள் உத்தரவுப்படி கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன், அவர்கள் கெங்கவல்லி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மலைக்கிராமமான பச்சமலை எடப்பாடி கிராமத்தில் வனத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தினார்.
ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கஞ்சா செடிகளை பயிரிடுதல், கஞ்சா விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் லைசன்ஸ் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருத்தல் சட்டவிரோதமான செயலாகும்.
இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும், கஞ்சா போன்ற போதை பொருட்களை யாரேனும் பயிரிடும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யவும், வங்கி கணக்குகள் முடக்கவும்
சட்டத்தில் வழிவகை உள்ளதாக தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கெங்கவல்லி வனசரக அலுவலர் சிவக்குமார், வனவர் வெங்கடேசன், வனக்காப்பாளர் பெரியசாமி, .பச்சமுத்து மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்