செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வடமேற்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த செயல்திறன் வெளிப்படுத்தியதற்காக, மறைமலைநகர் தீயணைப்பு நிலையம் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த தீயணைப்பு நிலையம் என்ற விருதை பெற்றது.

இந்தச் சாதனையை பாராட்டி, மறைமலைநகர் தீயணைப்பு காவலர்களுக்கு 2025 ஆண்டுக்கான சிறப்பு கோப்பை வழங்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் மட்டுமின்றி, விளையாட்டுத் துறையிலும் ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் திறமையை வெளிப்படுத்தியதற்காக அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களை மனதார பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















