இராமநாதபுரம் : உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1997-ல் காவலர் தேர்வில் தேர்வான முதல்நிலை காவல்துறையினர் சார்பாக ரூ.ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் நிதியினை, லடாக் எல்லையில் உயிர்நீத்த இராமநாதபுரம் ராணுவ வீரர் பழனியின் இல்லம் சென்று அவரது குடும்பத்தினருக்கு இன்று வழங்கினர்.