கன்னியாகுமரி : கடந்த ஜனவரி மாதம் 24 ம் தேதி மறைந்த (கிருஷ்ணமணி) நண்பருக்காக நிதி திரட்டிய டெலிகிராம் செயலியின் மூலம் ஒன்றிணைந்த 2008 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள காவல் நண்பர்கள். கிருஷ்ணமணியுடன் பயிற்சி பெற்ற காவலர்களும் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 2008 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களும் ஒன்று சேர்ந்து திரட்டிய நிதி ரூபாய் 716600/- பணத்தை கிருஷ்ணமணியின் இழப்பை ஈடுசெய்யும் விதமாக கிருஷ்ணமணியின் இரு மகள்களின் பெயரிலும் ரூபாய் 259902/- ரூபாய்.255567/- வீதம் எல்ஐசி பத்திரமாகவும் மீதமுள்ள தொகை 201131//- ரூபாயை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Dr.ஸ்ரீநாத், IPS,. அவர்களிடம் ஒப்படைத்து ,அவர் மூலமாக கிருஷ்ணமணியின் குடும்பத்திற்கு வழங்கினர்.
ஆணிவேர் இல்லாத ஆலமரத்தை விழுதுகள் தாங்கி பிடிப்பதை போல்! மறைந்த நண்பனின் குடும்பத்தை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிக்க உதவியாய் இருந்த 2008 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அத்தனை காவல் நண்பர்களுக்கும், கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.