திருநெல்வேலி : நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே (04-08-2022), ம் தேதியன்று, பாளை காவல் உதவி ஆய்வாளர் திரு.சண்முக மூர்த்தி, அவர்கள் மற்றும் காவல் துறையினர், ரோந்து சென்றபோது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மேலப்பாளையம் மெத்தைமார்பாளையம் பகுதியை சேர்ந்த மஹேந்திரன் (37), நின்று கொண்டிருந்த போது அவரை சோதனை செய்ததில், மறைத்து வைத்திருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து குற்றவாளியை கைது செய்தார்கள்.
மேலும் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட குறிச்சி வாய்க்கால் அருகில் மேலப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் திருமதி. பாத்திமா பர்வீன்,அவர்கள் மற்றும் காவல் துறையினர், ரோந்து சென்றபோது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மேலப்பாளையம் நாகம்மாள்புரத்தை சேர்ந்த அப்துல் செரீப் (24), நின்று கொண்டிருந்த போது அவரை சோதனை செய்ததில், மறைத்து வைத்திருந்த 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து குற்றவாளியை கைது செய்து வழக்கு, விசாரணை செய்து வருகிறார்கள்.