செங்கல்பட்டு: ,சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் கரோனா பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறி அப்பகுதியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சென்னை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.