சிவகங்கை : காரைக்குடி ஜீவாநகர் முதல் வீதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனிமுருகன் என்பவர் (10.08.2023) தேதி அதிகாலை 02.15 மணியளவில் தனது மனைவி ராஜேஸ்வரி மகள்கள் ஹரிஸ்மா ஜெயஸ்ரீ மற்றும் மகன் ஹரிகரசுதன் தனது மாமியார் ஆகியோருடன் தூங்கிகொண்டிருந்த போது யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் தீப்படித்து எரிந்த்தாகவும் சத்தம் கேட்டு எழுந்து தானும் தனது குடும்பத்தாரும் மற்றும் அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் தீயை அணைத்ததாகவும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பவ இடத்தினை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் Tower Tamp ஆகியவற்றை ஆய்வு செய்ததில் சம்பவஇடத்திற்கு சற்றுத்தொலைவில் இருந்த கண்காணிப்பு கேமராவில் சம்பவநேரத்திற்கு சில நொடிகள் கழித்து இரண்டு நபர்கள் ஓடுவது பதிவாகியிருந்ததால் அந்த நபர்கள் விசாரணை செய்து
அவர்களில் ஒருவர் காரைக்குடி முத்துபட்டிணம் 3வீதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரது மகன் என தெரியவந்ததால் அவரை தேடி வந்த நிலையில் (30.08.2023) தேதி காலை 06.00 மணிக்கு காரைக்குடி பாகம்பிரியாள் டீகடை அருகே வைத்து குற்றக்காரணம் கூறி கையகப்படுத்தி அவரை விசாரித்தபோது மேற்படி வழக்கின் வாதியான பழனிமுருகனின் மகன் ஹரிஹரசுதனுக்கும் காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அப்துல்ரியாஸ் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஹரிஹரசுதன் அப்துல்ரியாஸை அடித்துவிட்டதாகவும் அதற்கு பழிவங்க வேண்டும் என்று அப்துல்ரியாஸின் நண்பர்களான முனீஸ்வரன், ஜஹாங்கீர் சாய்பு என்ற உசைன், ராம்சங்கர் மற்றும் 3 நபர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் தீட்டியதாகவும் அதன்படி சம்பவதினத்திற்கு சிலநாட்களுக்கு முன்பு காரைக்குடி தாலுகா இலுப்பக்குடி அருகே உள்ள கண்மாயில் ஒத்திகை பார்த்தாகவும் பின் அனைவரும் சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு புறப்பட்டு
திருச்சி சென்றதாகவும் அங்கிருந்து திட்டமிட்டபடி சம்பவதினத்தன்று மேற்படி குற்றவாளிகளில் அப்துல்ரியாஸ், ஜஹாங்கீர் சாய்பு என்ற உசைன் மற்றும் இரண்டு நபர்கள் மட்டும் காரில் காரைக்குடி வந்ததாகவும் அப்துல்ரியாஸ், ஜஹாங்கீர் சாய்பு என்ற உசைன் ஆகியோர் காரைக்குடி பைபாஸ் ரோட்டில் காரில் இருந்து கொண்டு மற்ற இரண்டு நபர்களிடம் பெட்ரோல் குண்டை கொடுத்து ஹரிஹரசுதன் வீட்டில் வீச சொல்லி அனுப்பி வைத்ததாகவும் கூறிய தின் பேரில் மற்ற குற்றவாளிகளையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் ஒரு பேக் மற்றும் மற்றும் உடைந்த கண்ணாடி பீர்பாட்டில் ஆகியவை கைப்பற்றப்பட்டன. பின் விசாரணை முடித்து மேற்படி குற்றவாளிகளில் முனீஸ்வரன், ஜஹாங்கீர் சாய்பு என்ற உசைன், ராம்சங்கர் ஆகியோர் ராமநாதபுர மாவட்ட சிறையில் (13.09.2023) தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். மற்ற 3 நபர்களும் இளஞ்சிறார் என்பதால் மதுரை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி