திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம் இவர் மனித நேய ஜனநாயக கட்சி மாநில இணை செயலாளராக இருந்து வந்தார். மேலும் பல்வேறு சமூக சேவைகளையும் ஆற்றி வந்தார்.
இந்நிலையில் அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள மசூதிக்கு மோகரீப் தொழுகைக்காக சென்று தொழுகை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரே காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் இருந்து இறங்கி அவரை தலையை துண்டித்து எடுத்து சென்றுள்ளனர்.இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலைய துடி துடித்து உயிரிழந்துள்ளார்.
இதை கண்ட அக்க்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.இந்நிலையில் தகவல் அறிந்த அக்கட்சியினர்,படுகொலை செயபட்டவரின் ஆதரவாளர்கள் என சுமார் 500 க்கு மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிந்து வந்தனர்.
போலீசார் வசீம் அக்ரம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்பூர், ஆலங்காயம் பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கபட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.