மதுரை : மதுரையில் குடும்ப தகராறில் மருமகள் மீது ஆசிட் வீசிய மாமனார் மாமியார் உட்பட நான்குபேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை தத்தநேரி களத்து பொட்டல் பகுதியை சேர்ந்தவர் சையது அலி மனைவி அபிபசால்மா 22 .இவரை வரதட்சணை கேட்டு கூடுதலாக 5 பவுன் கேட்டு மாமனார் மாமியார் நாத்தனார் கொழுந்தனார் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கத்தேரி களத்துப் பொட்டல் பகுதியில் வ.உ.சி.தெருவில் சென்று கொண்டிருந்த அபிபசால்மாவை இவர்கள் வழிமறித்து தாக்கியதோடு மட்டுமல்லாமல் ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது .இதில் காயமடைந்த அபிபசால்மா செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ,மாமனார் மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.















