கோவை: பீளமேட்டில் உள்ள ஒரு மருத்துவமனையின் பெயரிலுள்ள மருந்து சீட்டை கொடுத்து இருதய மற்றும் மனநோயாளிகள் தூக்கத்துக்கு பயன்படுத்தக்கூடிய 20 மாத்திரைகள் கேட்டார்கள்.மருந்துக்கடை அதிபர் விஜயரங்கன் அவர்களிடம் வீட்டுமுகவரி கேட்டார். அதற்கு அவர்கள் கொடுக்கமறுத்துஅவரிடம்தகராறுசெய்தனர் .
.இதுகுறித்து கடைவீதிகாவல் நிலையத்துக்கு மருந்து கடை அதிபர் விஜயரங்கன் தகவல் கொடுத்தார்.உதவி போலீஸ் கமிஷனர் திரு.மணிகண்டன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திருமதி.சாந்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள் கொடுத்த மருந்து சீட்டு ஒரு மருத்துவமனையில் திருடியது என்பதும்அதை ராஜப்பா என்ற நோயாளி பெயரில் மாத்திரைகள் வாங்க முயன்றதும் தெரியவந்தது.
இது தொடர்பாககோவை என்.எச். ரோட்டை சேர்ந்த அன்வர் பாட்சா மகன் முகம்மது ரசூல் 22 ராமநாதபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்த ராஜன் மகன் சக்திவேல் 23 ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் இந்த மாத்திரைகளை வாங்கி கரைத்து போதை ஊசிமருந்துக்கு பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது. கோவை நகரில் கடந்த ஒரு மாதத்தில் போதை ஊசி கும்பலைச் சேர்ந்த 15பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.