திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரியும் மு.நி.கா-2512 திரு.மோகனகிருஷ்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் வேண்டுகோளையடுத்து, மாவட்ட காவல்துறையினர் தாமாக முன்வந்து ரூபாய்:6,17,200/- அவரது மருத்துவ செலவிற்காக வழங்கினர். மேற்படி தொகையை (26.09.2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திரு.மோகனகிருஷ்ணன், அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கினார்.