சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இந்திய மருத்துவக் கழகத்தின் சார்பில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் அசாதாரண சூழ்நிலையில், செய்ய வேண்டிய
முதலுதவி சிகிச்சை குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. தற்போது இருசக்கர, நான்கு சக்கர வாகன விபத்துக்கள், எதிர்பாராதவிதமாக நடக்கும் சாலை விபத்துக்கள் போன்று பல்வேறு விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வாறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் இருக்கும் இடத்திற்கு உடனடியாக செல்பவர்கள் காவல்துறையினர். அந்த அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற உடனடியாக முதல் உதவி சிகிச்சை அவசியம் என்ற சூழ்நிலையில், காவலர்களுக்கு அது குறித்தான பயிற்சியை இந்திய மருத்துவ கழகத்தின் செயலாளர் டாக்டர் குமரேசன் தலைமையிலான சிறப்பு மருத்துவ குழு மருத்துவர்கள் அளித்தனர். இம்முகாமில், காரைக்குடி கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு.ஸ்டாலின் I.P.S, தலைமையில், ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி