திருவாரூர்: தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ உதவித்தொகை மற்றும் இறப்பு நிவாரண நிதி தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட 4 காவல் ஆளிநர்களுக்கு சிறப்பு மருத்துவ உதவித்தொகையாக ரூ.1,66,140/- மற்றும் இறப்பு நிவாரண நிதிக்கு விண்ணப்பித்த 5 காவல் ஆளிநர்களுக்கு ரூ.1,80,000/- என மொத்தம் ரூ.3,46,140-க்கான காசோலையை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் (19.09.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் வழங்கினார்கள்.