திருவாரூர் : திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் இன்று (04.09.2024) நடைப்பெற்றது. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி.T.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
அப்போது, திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மருத்துவ கல்லூரி வளாகங்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். மேற்குவங்கத்தில் நடைபெற்ற அசம்பாவித சம்பவத்தை, போன்றதொரு அசம்பாவித சம்பவம் நடைபெறாத வகையில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.