சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளான மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார். வருடம் தோறும் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முதல் மருது பாண்டியர்களின் குருபூஜை தினத்தை அரசு விழாவாக கடைபிடித்து வருகிறது. அதன் அடிப்படையில் நகரில் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தூக்கிடப்பட்ட இடமான நினைவுத்தூண் (ஸ்தூபி) மற்றும் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அன்றைய தினங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமைச்சர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் போன்ற பலரும் ஆயிரக்கணக்கானோர் வருகைதர இருப்பதால் அது குறித்த பாதுகாப்பு மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த முன் ஏற்பாடுகள் பணிகள் குறித்து கேட்டறிந்தார். நடைபெற்ற இந்த ஆய்வில் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி