சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழா அக், 24 ல் நடைபெறுவதையொட்டி அன்னாரின் நினைவிடத்தில் பாதுகாப்புப் பணிகள் குறித்து இராமநாதபுர சரக காவல்துறை துணைத் தலைவர் துரை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 ஆவது நினைவுநாள் விழா வரும் அக், 24 ஆம் தேதி அரசு விழாவாக நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு இராமநாதபுர சரக காவல்துறை துணைத் தலைவர் துரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மருதுபாண்டியர் வாரிசுதாரர் சங்கத் தலைவர் ராமசாமியிடம் நினைவிட புத்தக குறிப்பேடுகள் கையாளப்படும் விதம் குறித்து கேட்டறிந்தனர். இந்த ஆய்வின் போது திருப்பத்தூர் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, மற்றும் நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி சார்பு ஆய்வாளர் செல்வபிரபு, காவல்துறையினர் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி