- திருச்சி, டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர் பகுதி), புதுக்கோட்டை மற்றும் மத்திய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருமயம், கீழ்ச்சீவல்பட்டி, திருப்பத்தூர், சிவகங்கை வழியாக காளையார்கோவில் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பிச்செல்ல வேண்டும்.
- கோயம்புத்தூர், திருப்பூர் (மேற்கு மண்டலம்) ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை பைபாஸ், சிவகங்கை வழியாக காளையார்கோவிலும், மதுரை, வரிச்சியூர், பூவந்தி, சிவகங்கை வழியாக காளையார்கோவிலும், மேலூர், மலம்பட்டி, சிவகங்கை வழியாக காளையார்கோவிலும் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பிச்செல்ல வேண்டும்.
- மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாநகர் பகுதிகளிலிருந்து வருபவர்கள் மதுரை, மானாமதுரை பைபாஸ், சிவகங்கை வழியாக காளையார்கோவிலும், மதுரை, வரிச்சியூர், பூவந்தி, சிவகங்கை வழியாக காளையார்கோவிலும், மேலூர், மலம்பட்டி, சிவகங்கை வழியாக காளையார்கோவிலும்
சென்று மீண்டும் அதே வழியில் திரும்பிச்செல்ல வேண்டும். 4. தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள மதுரை, மானாமதுரை பைபாஸ், சிவகங்கை வழியாக காளையார்கோவில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் அதே வழியில்
திரும்பிச்செல்ல வேண்டும்.
- இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வருபவர்கள் பரமக்குடி, பார்த்திபனூர், மானாமதுரை, சிவகங்கை வழியாக காளையார்கோவிலும், திருவாடனை, சருகணி வழியாக காளையார்கோவிலும் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் அதே வழியில் திரும்பிச்செல்ல வேண்டும்.
வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட வழித்தடங்கள்
- இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வருபவர்கள் பரமக்குடி, குமாரக்குறிச்சி, இளையான்குடி வழியாகவும்,
- மத்திய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் காரைக்குடி, மானாகிரி, கல்லல் வழியாகவும்,
- திருப்பத்தூர், மதகுப்பட்டி, நாட்டரசன்கோட்டை வழியாகவும் காளையார்கோவில் செல்ல அனுமதியில்லை.
என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பா.க.அரவிந்த், இ.கா.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி