திருவள்ளுவர் : டெல்லியை உலுக்கிய காற்று மாசுபாடு தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் பேசுபொருளாகியுள்ளது. மழைக்காலமாக இருப்பதால், வெப்பநிலை குறைவாக இருக்கிறது என்றும், காற்று வீசும் திசையில் மாறுபாடுகள் இருப்பதால், ஆங்காங்கே மாசுபாடு புகைமூட்டமாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தபோதும், டெல்லியில் உள்ள மாசுபாடு நிலை, சில ஆண்டுகளில் சென்னை நகரத்திற்கும் ஏற்படுமா என சென்னைவாசிகள் பலரையும் யோசிக்கவைத்துள்ளது.
ஒரு ஆய்வுக் கட்டுரை சொல்கிறது இப்படியே இன்னும் பத்து ஆண்டுகள் போனால் தமிழகமே பாலைவனம் ஆகிவிடுமாம். இதனைத் தடுக்கத் தான் பல அமைப்புகள் ஆங்காங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்கின்றன. இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து மரங்கள் வளர்க்க ஆவன செய்கின்றன.
“வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா? ஆனால் நம் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் காவல் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்து அனைவருக்கும் பலன் தரும் வகையில் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்