திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுமக்களிடம் கொரோனாவின் மரண பயத்தை காட்டிய போலீசாரின் செயல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
மேலும் தடுப்பூசி குறித்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. மலை கிராம மக்களிடம் இன்னும் கொரோனா குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.
இதனால் முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மலைவாழ் மக்கள் இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த வாரம் கொரோனா நோயாளியான ஒரு இளைஞர் கொடைக்கானல் ரோட்டில் குளூக்கோஸ் பாட்டிலுடன் அங்கும், இங்கும் ஓடுவதும். இதைப்பார்த்த பொதுமக்கள்
மிரண்டு ஓடுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது . அது போலீசாரின் நாடகம் என பின்புதான் தெரிந்தது. இந்நிலையில்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் காவல்துறையினர் கொரோனா நோய் தொற்றால் இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இறந்தவரின் உடல் அருகில் உறவினர் கூட செல்ல முடியாமல் கதறி அழுவது போன்று காட்சியமைத்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள் உண்மை சம்பவம் என கண் கலங்கினர்.
இவ்வாறு பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.இதை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.