அரியலூர் : அரியலூர் மாவட்டம் நெரிஞ்சிகோரை கிராமம் ஈஸ்வரன் ஏரியில் 15.10.2020 இன்று இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் அவர்களின் 89 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு SWEET TRUST BOYS – அமைப்பு மூலம் நடத்தப்பட்ட மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழாவில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு டாக்டர்.ஏபிஜே.அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் மரக்கன்று மற்றும் பனை விதைகளை நட்டார்.
இவ்விழாவில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மரங்களை நட்டு அவற்றை தொடர்ந்து பராமரித்து பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க கேட்டுக்கொண்டார். மேலும் கொரானா காலத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்கவும், அத்தியாவசிய தேவை இன்றி யாரும் வெளியில் செல்வதை தவிர்க்கவும் கேட்டுக்கொண்டார். மேலும் குற்றத்தடுப்பு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தெரிய வந்தால் உடனடியாக காவல் நிலையத்துக்கு தெரிவிக்க கேட்டுக்கொண்டார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி எடுத்துரைத்து கேடயம் திட்டத்தின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மரக்கன்றுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் நெரிஞ்சிகோரை ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.