விழுப்புரம் : இன்று ஜுன் – 05 உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு விழுப்புரம் போலீஸ் நண்பர்கள் குழு தலைமை அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு பசுமை திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணகுமார் மற்றும் FOP மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.லட்சுமிநாராயணன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்