தருமபுரி: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏர்ரபையனஹள்ளி பகுதியில் 42 ஏக்கர் பரப்பளவில், 13 வகையான பலன் தரும் 10ஆயிரம் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆசிரியர் தினத்தையொட்டி எர்ரபையனஹள்ளி ஊராட்சியில் பணி தொடங்கிய 100-வது நாளில் ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.