மயிலாடுதுறை: கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குழந்தை கடத்தல் செய்வதாக உண்மைக்கு மாறான தகவல் பேசப்பட்டும் சமுக வலைதளங்களில் பரப்பப்பட்டும் வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வாணகிரி கிராமத்தை சேர்ந்த பள்ளி சிறுவன் ஒருவனை மர்ம நபர்கள் முகத்தில் மயக்க மருந்து அடித்து கடத்தி சென்று காட்டுப்பகுதியில் வைத்து உடல் உறுப்புகளை திருடியதாகவும், ஆட்களை பார்த்தவுடன் அந்த சிறுவனின் உடலை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும், அந்த சிறுவன் இறந்துவிட்டதாக பொய்யான தகவல் சமுக வலைதளங்களில் (Whatsapp) முலம் பரப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறான குழந்தை கடத்தல் பற்றி வரும் தகவல் அனைத்தும் உண்மைக்கு மாறானது. இதுவரை குழந்தைகள் காணாமல்போனது மற்றும் கடத்தப்பட்டது பற்றிய எந்த ஒரு புகாரோ, தகவலோ வரவில்லை. எனவே பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. குழந்தைகள் கடத்துவதாக வரும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் போலியானவை. பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் யாரும் பரப்பவேண்டாம். மேலும், அவ்வாறு பரப்புவர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். மேலும், பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அவசர உதவி எண் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை 04364- 240100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.