மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், சுப்ரமணியபுரம், மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் பிரகாஷ் என்பவரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் (பார்ப்பதற்கு பரம ஏழை போல) வந்து மிகவும் பசியாக இருப்பதாக கூற, வீட்டிலிருந்தவர்கள் உண்ண கொஞ்சம் சோறும் நீரும் கொடுத்துள்ளனர், சாப்பிட்டுக்கொண்டே வீட்டினை உளவு பார்த்த அந்த நபர் ஆள் நடமாட்டம் இல்லாததை கவனித்து சட்டென வீட்டிற்குள் புகுந்து மேஜையில் இருந்த இரண்டு மொபைல் போனை எடுத்து கொண்டு தப்பி ஓட, அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டத்தை கண்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி புரியும் காவலர் 571 சீனிவாசன் பின்தொடர்ந்து ஓடி அரைமணி நேர போராட்டத்திற்கு பின் பயன்படுத்தபடாத ஒரு பழைய வீட்டில் பதுங்கி இருந்த திருடனை கைது செய்து இரண்டு மொபைல் போனையும் மீட்டு உரிமையாளரிடம் கொடுத்து விட்டு மொபைல் திருடனை மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார், இச்செயலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் இ.கா.ப வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்தால் சற்றும் தாமதிக்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கூறவும் அல்லது 100-ஐ அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.