அரியலூர் : அரியலூர் மாவட்டம்¸ செந்துறை ரவுண்டானா அருகே முதியவர் ஒருவர் ஆதரவற்று உடல்நிலை சரியில்லாமல் மயக்க நிலையில் இருந்துள்ளார். நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல் உதவி ஆய்வாளர் திரு. திருமேனி அவர்கள், முதல் நிலை காவலர் திரு.சதீஷ் மற்றும் திரு.ராம சந்திரன் ஆகியோர் இணைந்து முதலுதவி அளித்து¸ உணவு வழங்கினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, முதியவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்செயலை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்