இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 24.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், உணவுப் பொட்டலங்களும் காவல்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று (05.06.2021) தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன தொண்டியில் உள்ள அன்பாலையா மன வளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு தொண்டி காவல் நிலையம் சார்பாக, அரிசி உள்பட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியை பரமக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.வேல்முருகன், தொண்டி காவல் ஆய்வாளர் திரு.ஆனந்தக்குமார், சார்பு ஆய்வாளர் திரு.சித்தன், தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.முருகானந்தம், தலைமைக் காவலர் திரு.ராஜு மற்றும் தனிப்பிரிவு முதல்நிலைக் காவலர் திரு.துரை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.