சென்னை: சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு உதவ “காவல் கரங்கள்” என்ற ஒருங்கிணைந்த உதவி மையம் பெருநகர காவல் கட்டுப்பாட்டறையில் 24×7 இயங்கி வருகிறது .
இதன் மூலம் சென்னை பெருநகரில் உறவுகள் அற்ற நிலையில் இருப்பிடம் இல்லாமல் நோய்வாய் பட்டு உதவி வேண்டி இருந்து வரும் முதியோர், பெண்கள், சிறுவர்கள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்,
காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையாளர் மேற்பார்வையில் பெண்கள் உதவி மைய எண். 1091, குழந்தைகள் உதவி மைய எண் . 1098 , முதியோர்கள் உதவி மைய எண் .1253 அவசர அழைப்பு 100 என்ற எண்கள் மூலம் உதவி வேண்டி பெறப்படும் அழைப்புகள் மூலம் காவல் உதவி மையம் , காவல் கரங்கள் , அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து , சாலையில் தவிக்கும் ஆதரவற்றோர் , முதியோர் மற்றும் உடல் நலம் , மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை சென்னை பெருநகர காவல்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.