பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் சிறுவாச்சூர் ஆட்டோ நிறுத்தம் அருகே இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபரையும் , அஸ்வின் உணவகம் அருகில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஆண் நபரையும் மற்றும் சாய்பாபா கோயில் அருகே சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 57 வயது மதிக்கத்தக்க ஆண் நபரையும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி சுப்புலட்சுமி, உதவி ஆய்வாளர் திருமதி விஜயலட்சுமி மற்றும் காவலர்கள் மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி