விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க பெண்மணி வெகுநேரம் நிற்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் * துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.அர்ச்சனா அவர்களின்*
உத்தரவின்படி காவல்துறையினர் விசாரணை செய்ததில் அந்த பெண்மணி இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள இராமசாமிபட்டியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி என்றும் அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது,
மேலும் அவர் விருதுநகர் தந்திமரத் தெருவில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்க்கு வந்ததாகவும் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் வழி தெரியாமல் நின்று கொண்டிருந்தவரை காவல்துறையினரின் துரித நடவடிக்கையின்படி அவரது உறவினரின் வசம் பாதுகாப்பாக ஒப்படைக்கபட்டார். இந்த செயலை காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர். இ. கா.ப. அவர்கள்* வெகுவாக பாராட்டினார்.