திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கீழ நாகை கட்டேறி வாய்க்கால் அருகில் கஞ்சா விற்பனை செய்த – மன்னார்குடி, மேல நெம்மேலி , அண்ணாபுரம் காலணி தெருவை சேர்ந்த கருப்பு @ ரெங்கராஜ் 26, மன்னார்குடி, பின்லே பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்த – மன்னார்குடி, 4-ஆம் தெருவை சேர்ந்த நிஜந்தன் 31. ஆகிய இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 400 கிராம் கஞ்சா பறிமுதல்.
சிறப்பாக செயல்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த மன்னார்குடி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வேலாயுதம் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.
மேலும், பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.