திருவாரூர்: உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் இன்று (21.02.2024) மன்னார்குடி நகரில் நடைப்பெற்றது. முன்னதாக மனுக்கள் பெரும் நிகழ்வு (14.02.2024) அன்று மன்னார்குடி வட்டத்தில் உள்ள மன்னார்குடி, தலையாமங்கலம், உள்ளிக்கோட்டை மற்றும் கோட்டூர் சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடைப்பெற்றது. மேற்படி கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
மேற்படி மனுக்கள் மீதான களஆய்வு செய்வதற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடப்பட்டிருந்த நிலையில் இன்று (21.02.2024) களஆய்வு நடைப்பெற்றது.
அப்போது மன்னார்குடி நகர காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திருமதி.T.சாருஸ்ரீ, இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஈஸ்வரன், அவர்கள், மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் அவர்கள் மற்றும் மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடனிருந்தார்கள்.