நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் நோய் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். நடிகர் விவேக் மரணம் தொடர்பாக பேசிய மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தார். விவேக் அனுமதிக்கப்பட்டு இருந்த வடபழனி சிம்ஸ் ஆஸ்பத்திரி முன்பு இருந்துதான் மன்சூர் அலிகான் தடுப்பூசி தொடர்பான தகவல்களை தெரிவித்து இருந்தார். இதைதொடர்ந்து மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டல அதிகாரி பூபேல், வடபழனி போலீஸ் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது புகார் செய்தார்.