திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ்(67) இவர் ஒரு கட்டிட தொழிலாளி இவரது மனைவி விஜயலட்சுமி வயது 56 இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் குடும்ப பிரச்சினை காரணமாக 7 ஆண்டுகளாக விஜயராஜ் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தார் பின்னர் கடந்த மூன்று மாதங்களாக குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.அப்போது விஜயராஜ் வைத்திருந்த நிலத்தை தல 75 சென்ட் வீதம் இரு மகன்களுக்கும் பிரித்து எழுதி தந்தார். பின்னர் மனைவி விஜயலட்சுமி மகன் வினோத்குமார் ஆகியோர் அவரை வீட்டை விட்டு விரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் மனைவி மற்றும் மகன் வினோத்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மத்திய காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜெய்சங்கர் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் மற்றும் காவலர்கள் விஜயகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.