மதுரை : மதுரை கோரிப்பாளையம் கான்சாபுரத்தில் வசித்து வருபவர் அந்தோணிசாமி வயது (82), இவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்து குழந்தைகள் இல்லை நான்காவது மனைவியாக சுசிலா வயது (52), என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே சண்டை வந்தது மனைவியை கீழே தள்ளிவிட்டு வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்து மனைவியை எழுப்பும்போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. தகவலை அறிந்த மதுரை தல்லாகுளம் போலீசார் முதலில் சந்தேகம் மரணம் என்று பதிவு செய்து. பின்பு பிரேத பரிசோதனையில் தலையில் அடிபட்ட இறந்ததாக வந்த தகவலை அடுத்து சுசிலாவின் கணவர்அந்தோணிசாமி அவர்களை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது