சென்னை: சென்னை இராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கனிமொழி 22. என்பவருக்கும் அவரது கணவர் சுப்பிரமணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் சுப்பிரமணி அருகிலிருந்த அம்மி அரைக்கும் குழவிக்கல்லை எடுத்து கனிமொழி தலையில் போட்டு, கொலை செய்து தப்பிச் சென்றுள்ளார்.
மேற்படி சம்பவம் குறித்து, கனிமொழியின் சகோதரர் கந்தவேல் 20. என்பவர் D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு கனிமொழியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற அவரது கணவர் சுப்பிரமணி 40. விழுப்புரம் என்பவரை கைது செய்தனர்.
