இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்காலகுறிச்சியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் அவரது மனைவி தவசியம்மாள் என்பவருக்கும் இடையே 05.07.2005-ம் தேதி ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில் பஞ்சவர்ணம் அவரது மனைவி தவசியம்மாவை கையால் கழுத்தை நெறித்து கொலை செய்து தடயத்தை மறைக்க அவரது உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததையடுத்து கீழத்தூவல் காவல் நிலைய குற்ற எண். u/s 302 IPC & 201 IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று 26.02.2020-ம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.சண்முகசுந்தரம் அவர்கள் மேற்படி எதிரியான பஞ்சவர்ணம் என்பவருக்கு கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள்தண்டனை மற்றும் 5,000/- ரூபாய் மேலும், தடையத்தை மறைத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2,000/-ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்