தேனி : தேனி மாவட்ட சின்னமனூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 -ம் ஆண்டு கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் கர்ப்பிணி பெண்ணை தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்ததையடுத்து காவல்துறையின் துரித விசாரணையின் மூலம் தனது மனைவியை கொடுமைப்படுத்தி வயிற்றிலிருந்த 6 மாத சிசு கருச்சிதைவு ஏற்படும் வகையில் தாக்கியும்,அவர் அணிந்திருந்த தாலி கயிற்றால் கழுத்தை இருக்கி கொலை செய்த குற்றவாளி சுரேஷ் என்பவர் மீது கொலை மற்றும் கருச்சிதைவு செய்த குற்றத்திற்காக நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், இவ் வழக்கானது தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி திரு.A.அப்துல் காதர்,BABL., அவர்களால் விசாரிக்கப்பட்டு வழக்கின் இறுதி விசாரணை முடிவில் சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினர் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் 15.12.2020-ம் தேதி சுரேஷ் கொலை குற்றவாளி என்பதை உறுதி செய்து கொலை குற்றவாளிக்கு சாகும்வரை தூக்கு தண்டனை விதித்தும் மற்றும் கருசிதைவு செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், + ரூபாய் 10,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் அதிகாரிகள், நீதிமன்ற காவலர்கள், அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி