இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏனாதியில் குடும்ப பிரச்சினை காரணமாக மாடசாமி என்பவர் தனது மனைவி ராதிகா என்பவரை கழுத்தை நெறித்து கொலை செய்ததாக ராதிகாவின் தந்தை கஜேந்திரன் பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த முதுகுளத்தூர் வட்டக் காவல் ஆய்வாளர் திரு.மோகன் அவர்கள் மாடசாமியை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.