இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தோளுர் தெற்குபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் தர்மர் என்பவர் குடும்ப பிரச்சினையில் தனது மனைவி பஞ்சவர்ணம் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தார்.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த பஞ்சவர்ணம் சிகிச்கை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அபிராமம் காவல் நிலையத்தில் குற்ற எண்: 51/2015 u/s 307 IPC @ 302 IPC –ன் பிரகாரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை முடிந்து 29.11.2021-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி திருமதி.சுபத்ரா அவர்கள் மேற்படி குற்றவாளியான தர்மர் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 3,000/- அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் 2 ஆண்டுகள் மெய்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.