கோவை: கோவை போத்தனூரில் சேர்ந்தவர் ஹீனா தஷ்னீம் .( வயது 26 ) இவருக்கும் சரவணம்பட்டி திருமலை நகரைச் சேர்ந்த ஷாஜகான் மகன் பாஹிம் என்பவருக்கும் 27- 10 – 2016 அன்று திருமணம் நடந்தது. கணவர் பாஹிம் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வந்தார். திருமணத்தின் போது 100 பவுன் நகையும் ரூ 4 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
அவரது கணவர் பாஹிம், தாயார் நூரின் நிகார் , தம்பி நதீம் ஆகியோர் கொடுமைப்படுத்தினார்களாம் .மேலும் பாகிம் க்கு மற்றொரு திருமணம் செய்வதற்கு முயற்சி செய்தார்களாம். இதை தட்டி கேட்ட ஹீனா தஷ்னி மை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஹீனா தஷ்னிம் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் அமுதா இது தொடர்பாக விசாரணை நடத்தி ஹீனா தஸ்னி மின் கணவர். அவரது தாயார், தம்பி ஆகியோர் மீது கொலை மிரட்டல் ,வரதட்சனை கொடுமை உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.