கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கரட்டுமேட்டை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50 )இவரது மனைவி கலாமணி (வயது 48) காய்கறி வியாபாரம் செய்து வந்தனர் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி கலாமணி கோபித்துக்கொண்டு தனது அத்தை வீட்டுக்கு சென்றுவிட்டார் இதை அறிந்த செல்வராஜ் மனைவியிடம் சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார் இதற்கு கலாமணி மறுத்தார் இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை கத்தியால் குத்தினார் இதில் கலாமணி படுகாயமடைந்தார் இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் இது குறித்து கலாமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் செல்வராஜை கைது செய்தனர் இவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்