கோயம்புத்தூர் : சிவகங்கை மாவட்டம் சாக்கூரை சேர்ந்தவர் மார்ட்டின் (34). தொழிலாளி. இவரது மனைவி விண்ணரசி (33). இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் அன்னூர் ஒன்றியம் செம்மானம் செட்டிபாளையத் தில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
மார்ட்டின் குடிபோதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்ததால், விண்ணரசி தனது சொந்த ஊரான திருநெல் வேலிக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது தோழியான தேன்மொழி வீட்டிற்கு வந்த அவர், அங்கு வைத்து தனது கணவனை அழைத்து சமரசப்படுத்தி குடும்பம் நடத்தலாம் என்று எண்ணினார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து கணவரை அழைத்துள்ளார். அங்கு வந்த கணவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விண்ணரசியைஇடது கை, வலது கை, தோள்பட்டை என சரமாரியாக வெட்டினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத விண்ணரசி ரத்த வெள் ளத்தில் மயங்கினார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்ட்டினை கைது செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
நமது குடியுரிமை நிருபர்
![](https://34.68.197.11/wp-content/uploads/gokul.png)