திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (05.09.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, பொதுமக்கள் அளித்த புகார் மனுவின் மீது ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டார்கள். மேலும், காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட இருப்பதால், விநாயகர் சிலைகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்கள். அப்போது, திருத்துறைப்பூண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் உடனிருந்தார்கள்