சிவகங்கை : சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் திரு .மணி அவர்கள் அவ்வழியாக சாலையில 3.30 மணி அளவில் நடந்து கொண்டிருந்தவர்களை விசாரித்த பொழுது, அவர்களுடன் சென்ற பெண்மணி 9 மாதங்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் உடல்நிலை சரியில்லாமல், இரண்டு தினங்களாக அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்.
சிகிச்சை முடித்து ஊருக்கு செல்ல பணம் இல்லாமல் அவரும் அவருடைய கணவரும் திருப்பத்தூருக்கு சாலை மார்க்கமாக நடந்தே சென்று கொண்டிருந்தார் அவருடைய நிலைமையை பார்த்த ஆய்வாளர் பாதுகாப்பு பணியில் இருந்துகொண்டே காவல் வாகனத்தில் ஏற்றி திருக்கோஷ்டியூர் வரை சென்று, அங்கிருந்து வேறு ஒரு வாகனத்தில் அவருடைய ஊருக்கு பத்திரமாக அனுப்பி அனுப்பி வைத்தார். இந்த மனிதநேயத்தை கண்ட அப்பகுதி மக்கள் அவரை பாராட்டியதுடன் காவல்துறை மீது மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்