சென்னை: ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் சிரமப் படுவார்கள் என்பது அனைத்து மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் அனைவரும் அறிந்ததே. இதில் காவலர்கள் பணி அளப்பெரியது. அதையும் தாண்டி மனித நேயத்தை தொடும் பணியாக பூந்தமல்லி சரகம் அனைத்து மகளிர் காவல் நிலையம் W-30 காவல் ஆய்வாளர் ஜோதிலக்ஷ்மி, உதவி ஆய்வாளர் ரீனா மற்றும் மகளிர் காவல் நிலையம் காவலர்கள் இணைந்து பூந்தமல்லி பஸ் டிப்போ இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு தேடிப்போய் உணவு அளித்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுமார் 10 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வீடு தேடிப் போய் கொடுத்தது, ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொன்ன பழமொழிக்கு ஏற்ப அதை நேரில் பார்த்தவர்கள் சொல்வார்கள் என்று சொன்னால் அந்த வார்த்தை மிக ஆகாது தொடரட்டும் இப்பணிகள் வளரட்டும் காவல் துறையின் பணிகள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா