பெரம்பலூர்: கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் மற்றும் டான் அறக்கட்டளையின் தாளாளர். டாக்டர்.எம்.கிறிஸ்டோபர் அவர்கள் முன்னிலை வகித்தார். கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் மற்றும் டான் அறக்கட்டளையின் செயலர் டாக்டர்.சி.மித்ரா தலைமை ஏற்று நடத்தினார். அவர் பேசுகையில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறை மற்றும் மனித கடத்தலை தடுப்போம் என்று அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
சிறப்பு நிகழ்வாக மாவட்ட சட்டப்பணிகள் துறை துணைநீதிபதி திருமதி.லதா அவர்கள் துண்டு பிரச்சுரம் வெளியிட்டு அனைத்து அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் வழங்கி கிராமம் தோறும் இந்த விழிப்புணர்வைக் கொண்டு செல்ல வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.மணி அவர்கள் சுவரொட்டியை வெளியிட்டார். மேலும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறை மற்றும் மனித கடத்தலுக்கு எதிராக செயல்புரிந்து காவல் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு அளிப்போம் என்று உறுதி கூறினார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திரு.முரளிகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் திருமதி.அருள்செல்வி களப்பணிகள் பற்றிய வழிகாட்டுதலை கூறினார்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தாய்வீடு, பெஸ்ட், ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை, DMI, AEC, சமூக பணியாளர் அறக்கட்டளைகளின் நிர்வாகிகள், டான் அறக்கட்டளையின் களப்பணியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை வளைகரங்கள் சங்கத் தலைவி திருமதி. அமராவதி அவர்கள் தொகுத்து வழங்கினார். திரு.எஸ்.மோகன்ராஜ் அவர்கள் நன்றி கூறினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை